» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவி வரும் இழுபறி மற்றும் தாமதத்தால் மனமுடைந்து, கடந்த 9-ஆம் தேதி தீக்குளித்த அக்கட்சியின் நிர்வாகி இசக்கியப்பன் (45), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வி. இசக்கியப்பன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிரத் தொண்டராகவும், நிர்வாகியாகவும் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து, விஜய் அவர்கள் முதலமைச்சராக வேண்டும் எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களையும் இவர் செய்திருந்தார்.தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் ஆளுநர் அழைப்பு விடுப்பதில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் இசக்கியப்பன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதன் வெளிப்பாடாக, கடந்த மே 9-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பழவூர் காவல் எல்லைக்குட்பட்ட மகாராஜபுரம் சந்திப்பில், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார்.
சுமார் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 14, மே 2026 3:40:18 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு - முதல்வர் விஜய் உத்தரவு!
வியாழன் 14, மே 2026 3:30:06 PM (IST)


