» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.60% தேர்ச்சி : மாநில அளவில் தூத்துக்குடி 9வது இடம்!
புதன் 20, மே 2026 10:27:09 AM (IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் 96.60 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 159 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
நடைபெற்று முடிந்த மார்ச் / ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20.05.2026) வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் என மொத்தம் 308 பள்ளிகளில், 21762 மாணாக்கர்கள் தேர்வெழுதி, 10157 மாணவர்கள், 10855 மாணவியர்கள் என மொத்தம் 21022 மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டமானது 9 வது இடம் பிடித்துள்ளது. தேர்ச்சி சதவீதம் 96.60 ஆகும். இம்மாவட்டத்தில் 159 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள 89 அரசுப் பள்ளிகளில் இருந்து 2336 மாணவர்கள் மற்றும் 3107 மாணவியர்கள் என மொத்தம் 5443 மாணாக்கர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
அதில் 2177 மாணவர்கள், 3036 மாணவியர்கள் என மொத்தம் 5213 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 95.77 ஆகும். 40 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவ / மாணவியர்கள் சாதனை புரிந்துள்ளனர். மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டமானது 6வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
159 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 308 பள்ளிகளில், 159 பள்ளிகள் தங்களது மாணவர்களை 100% முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 89 அரசுப் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100% நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக முத்திரை பதித்துள்ளன.
சாதனைகளைப் புரிந்த மாணவச் செல்வங்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 8:18:36 PM (IST)

அரசு அலுவலகங்களில் ஆய்வு எனும் பெயரில் தவெகவினர் அத்துமீறல்: தினகரன் குற்றச்சாட்டு
புதன் 20, மே 2026 5:07:09 PM (IST)

சட்டசபையில் விஜய் படத்தை காட்டிய தவெக எம்.எல்.ஏ : சபாநாயகர் கண்டனம் - அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
புதன் 20, மே 2026 4:38:33 PM (IST)

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 4:31:10 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்தால் ஆதரவு வாபஸ்..? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை!
புதன் 20, மே 2026 12:45:39 PM (IST)


