» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே? டீப் ஸ்லீப் மோடில் முதல்வர் - உதயநிதி அட்டாக்!
வெள்ளி 29, மே 2026 4:54:05 PM (IST)

தமிழகத்தில் தொடரும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஜோசப் விஜய், 'டீப் ஸ்லீப் மோடுக்கு' சென்றுவிட்டதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளதுடன், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் இப்படித் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் கொடூரக் குற்றச்சம்பவங்களைப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் 'சட்டம் ஒழுங்கு' என்ற ஒன்று தற்போதைய சூழலில் இருக்கிறதா இல்லையா என்ற பலத்த சந்தேகமும் அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இந்த 'சோபா மாடல்' அரசு அமைந்தது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை எனப் பிராந்தியத்தில் குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்ற அவல நிலை உருவாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரக் களத்தில் பக்கம் பக்கமாகத் தரவுகளை வைத்துக் கொண்டு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து வாய் கிழியப் 'பஞ்ச் டயலாக்' பேசியவர், மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே முற்றிலும் 'டீப் ஸ்லீப் மோடுக்கு' சென்றுவிட்டார்.
பெண்களின் பாதுகாப்பிற்காக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண்கள் படை' பிரிவின் தொடக்க விழாவை, இறுதி நேரத்தில் திடீரென ரத்து செய்திருப்பது ஏன்? இந்தத் தொடக்க விழா நிகழ்ச்சி தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதா, அல்லது அந்த உன்னத முயற்சியையே மாவட்ட நிர்வாகமும் அரசும் முற்றிலும் கைவிட்டுவிட்டதா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வெறும் 'சிங்கப்பெண் படை' என்று பெயரையும், அதற்கான சீருடையையும் (Uniform) மாற்றுவது மட்டும்தான் உங்களது உள்கட்டமைப்பு மாற்றமா? அல்லது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இன்னும் உங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதா? நீங்கள் தனியாக நேரம் எடுத்து, நிர்வாகத்தைக் கற்றுக்கொண்டு வந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வரை, மாநிலத்தின் தற்போதைய அசாதாரணச் சூழலைத் தமிழ்நாடு தாங்காது முதலமைச்சர் அவர்களே!" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
வெள்ளி 29, மே 2026 5:40:13 PM (IST)

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக தவெக மீது வழக்கு: ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு
வெள்ளி 29, மே 2026 5:15:50 PM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

முதல்வரின் உடையில் திடீர் மாற்றம்: பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகம் வந்தார்!
வெள்ளி 29, மே 2026 12:35:02 PM (IST)

மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!
வெள்ளி 29, மே 2026 12:28:36 PM (IST)

முறைகேடு தொடர்பாக பாகுபாடின்றி நடவடிக்கை : அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி
வெள்ளி 29, மே 2026 12:02:41 PM (IST)


