» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
ஞாயிறு 31, மே 2026 10:35:20 AM (IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, சென்னை உட்பட 5 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னை உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருணாளினி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா பங்கேற்பு!
திங்கள் 1, ஜூன் 2026 8:37:29 PM (IST)

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)


