» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு, இதுவரை முறைசாராவாக வசூலிக்கப்பட்ட தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 88 லட்சம் முதல் 90 லட்சம் வரையிலான மதுபானப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மதுப்பெட்டிகள் விநியோகத்தின் போது, இதுவரை பல்வேறு நிலைகளில் முறைசாராக் கட்டணங்கள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் வரை முறைகேடாக வசூலிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தடுத்து நிறுத்தி, டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் ஊழலை ஒழிக்கவும் மதுவிலக்குத் துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தப் புதிய நடைமுறையின் மூலம் அரசு கஜானாவிற்கு மாதத்திற்குச் சுமார் ரூ.100 கோடி கூடுதல் நிதி வருவது உறுதியாகியுள்ளது.

புதிய கட்டண விபரம் (ஒரு பெட்டிக்கு):

ஹாட் வகை மதுபானப் பெட்டி (Hot Box): ரூ.90

பீர் பெட்டி (Beer Box): ரூ.40

ஒயின் பெட்டி (Wine Box): கூடுதல் கட்டணம்

இந்தக் கூடுதல் கட்டணங்கள் அனைத்தும் இனி எவ்வித முறைகேடுமின்றி நேரடியாக அரசு கணக்கிலேயே சேர்க்கப்பட உள்ளன.

717 கடைகள் மூடல் – தொடரும் சோதனைகள்:

தமிழகத்தில் முன்னதாக மொத்தம் 4,787 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிட்டார்.

அதன்படி, முதற்கட்டமாக விதிமீறலில் இருந்த 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு அவை முழுமையாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் எஞ்சியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிலக்குத் துறை அதிகாரிகள் மூலம் தீவிரச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory