» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் விஜய் வழங்கினார்!
திங்கள் 8, ஜூன் 2026 12:10:14 PM (IST)

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்!
நார்வே செஸ் 2026 சர்வதேசத் தொடரில், முதல் இந்தியராகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளளநிலை கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் விஜய், பாராட்டி ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியதோடு மட்டுமன்றி, அவருடன் இணைந்து முதல்வர் செஸ் விளையாடினார்.
நோர்வே சர்வதேச செஸ் போட்டியில் உலகத் தரம் வாய்ந்த வீரர்களை வீழ்த்தி, இத்தொடரின் வரலாற்றிலேயே முதன்முறையாகப் பட்ட வென்ற முதல் இந்தியர் என்ற அரிய பெருமையைப் பெற்றுத் தாயகம் திரும்பிய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, பிரக்ஞானந்தாவின் இந்த உலகளாவிய மாபெரும் சாதனை தமிழர்களுக்கும், ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துப் பாராட்டிய முதல்வர், அவருக்குத் தமிழக அரசின் உயரிய பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நேரில் வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, உலகச் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, தலைமைச் செயலக வளாகத்திலேயே அவருடன் முதல்வர் ச.ஜோசப் விஜய் செஸ் விளையாடி மகிழ்ந்தார். சர்வதேச அரங்கில் நாட்டின் புகழைக் கொண்டு சேர்த்த இளம் விளையாட்டு வீரரை நேரில் அழைத்து, பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியதோடு மட்டுமன்றி, அவருடன் இணைந்து முதல்வர் செஸ் விளையாடிய சுவாரசியமான நிகழ்வு விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான ஆகஸ்டு மாதத்தில் இடைத்தேர்தல்? ஜூலை இறுதியில் அறிவிப்பு
வியாழன் 11, ஜூன் 2026 8:37:05 PM (IST)

மத்திய அரசில் 12,256 பணியிடங்களுக்கு ஜூன் 22-க்குள் விண்ணப்பம்: ஜூன் 17-ல் வகுப்புகள் துவக்கம்!
வியாழன் 11, ஜூன் 2026 5:09:03 PM (IST)

இளம்பெண் மரணம்: ஆணவக் கொலை அல்ல - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம்!
வியாழன் 11, ஜூன் 2026 3:42:03 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் - மதுரை, உவரி - தூத்துக்குடி தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?
வியாழன் 11, ஜூன் 2026 3:24:23 PM (IST)

தூத்துக்குடியில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வியாழன் 11, ஜூன் 2026 3:11:40 PM (IST)

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தவெக எம்.எல்.ஏ பதவி நீக்கம் - உதயநிதி வலியுறுத்தல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:54:15 PM (IST)



மக்கள்Jun 8, 2026 - 02:36:02 PM | Posted IP 172.7*****