» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:32 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானைச் சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும் ஆன்மிகத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும், நாள்தோறும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். பின்னர் பொது தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகளில் சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானைச் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வாகனங்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் வருகை தந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பிரதான சாலையின் இருபக்கமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற காலப் பூஜைகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட நகைகள் மீது 4 மாதங்களுக்குள் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதி
ஞாயிறு 14, ஜூன் 2026 8:04:10 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி: எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:03:58 PM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)


