» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து 16 வழக்குகள் தாக்கல்!
புதன் 17, ஜூன் 2026 8:32:19 PM (IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சரும் தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் உள்ளிட்ட மூவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது. தவெக தலைவர் விஜய், இத்தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அவருக்கு எதிராகப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் அந்தத் தொகுதியின் வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசு அமைந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் நீதிமன்றத்தில் சுமார் 16 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகச் சிவராஜ் என்ற வாக்காளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ மருது கணேசும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதேபோல், திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசும், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகத்தின் வெற்றிக்கு எதிராக வாக்காளர் பெரியசாமி என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தத் தொடர் வழக்குகள் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!: பொதுக்குழுவில் தீர்மானம்!
சனி 20, ஜூன் 2026 5:05:37 PM (IST)

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஒரே நாளில் சிவகங்கை டூ மதுரைக்கு மாற்றப்பட்ட ஆட்சியர்!
சனி 20, ஜூன் 2026 3:58:57 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.245.85 கோடி திட்டப்பணிகள் ரத்து : அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 20, ஜூன் 2026 3:44:34 PM (IST)

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)


