» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்குத் தடை : ஜூலை 1 முதல் அமல் - பக்தர்களுக்கு அறிவுறுத்தல்!
வியாழன் 18, ஜூன் 2026 7:47:25 AM (IST)
ஜூலை 1 முதல் மொபைல் போன் கொண்டு சென்றால் பறிமுதல்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைப்பேசி தடை உத்தரவு தீவிரமாக அமல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கும், பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு கடந்த 14.11.2022 முதலே அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தின் அவ்வுத்தரவை எவ்விதத் தொய்வுமின்றி 100 சதவீதம் முழுமையாகச் செயல்படுத்தும் நோக்கில், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தத் தடையானது மிகத் தீவிரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இதன் காரணமாக, கோவிலின் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் முப்படைப் பாதுகாப்புப் பிரிவினர் மூலம் முழுமையான உடல் மற்றும் உடைப் பரிசோதனைகளுக்குப் பின்னரே பக்தர்கள் இனி கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும்:
எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதி அறைகளிலோ அல்லது தங்களது சொந்த வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் நுழைவாயில் அருகே கட்டண முறையில் நிறுவப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கைப்பேசி வைப்பிடங்களைப் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனையும் மீறிப் பாதுகாப்புப் பரிசோதனையின் போது பக்தர்கள் யாரேனும் ரகசியமாகக் கைப்பேசிகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவை உடனடியாகப் பாதுகாப்புப் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டுப் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்குள் கைப்பேசி இல்லாத சூழலில் பக்தர்களுக்கு ஏற்படும் அவசரத் தேவைகளை ஈடு செய்ய, கோவில் வளாகத்திற்குள்ளேயே மருத்துவ மையம், 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிப்பு மையம் , அவசர ஒலிபெருக்கிகள், முதியோர்களுக்கான மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலிகள்உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆன்மீக அமைதியைப் பேணவும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்தவும் கோவில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!: பொதுக்குழுவில் தீர்மானம்!
சனி 20, ஜூன் 2026 5:05:37 PM (IST)

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஒரே நாளில் சிவகங்கை டூ மதுரைக்கு மாற்றப்பட்ட ஆட்சியர்!
சனி 20, ஜூன் 2026 3:58:57 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.245.85 கோடி திட்டப்பணிகள் ரத்து : அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 20, ஜூன் 2026 3:44:34 PM (IST)

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)


