» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.2.96 கோடி: 620 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி வசூல்!
புதன் 1, ஜூலை 2026 7:39:00 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.2.96 கோடி ரொக்கப் பணம் மற்றும் 620 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் வசூலாகியுள்ளன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வாளர் செந்தில்நாயகி மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கோயில் பணியாளர்கள் மற்றும் அயற்பணி ஊழியர்கள் இக்காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உண்டியல் தரம் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் ரொக்கமாக 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாயைக் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது தெரியவந்தது. ரொக்கப் பணம் தவிர, 620 கிராம் தங்கம், 10,825 கிராம் வெள்ளி, 22,540 கிராம் பித்தளை, 1,430 கிராம் செம்பு மற்றும் 7,240 கிராம் தகரம் ஆகிய உலோகப் பொருட்களும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,502 வெளிநாட்டுப் பணத்தாள்களையும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

மதுபோதையில் தாயைத் தாக்கிய மகனை எரித்துக் கொன்ற தந்தை: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 1, ஜூலை 2026 8:40:08 AM (IST)

மானிய மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது : தமிழக அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 8:34:54 AM (IST)

கனரக லாரி மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது : மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு!
புதன் 1, ஜூலை 2026 7:54:45 AM (IST)

பலத்த காற்றில் பக்கிள் ஓடைக்குள் கவிழ்ந்த ஆட்டோ: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 1, ஜூலை 2026 7:49:30 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)


