» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு மாடல் வாஷிங் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்குமா? - கனிமொழி கேள்வி!
வியாழன் 2, ஜூலை 2026 11:01:55 AM (IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில், தவெக-வை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து விலகிப் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் த.வெ.க.வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கடந்த காலங்களில் குட்கா விவகாரம் தொடர்பாகப் பல்வேறு புகார்களும் விசாரணைகளும் நடைபெற்று வந்த பின்னணியைக் குறிப்பிட்டு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வட மாநிலங்களில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங் மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?" எனத் தவெக-வின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் குத்தலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாமல்லபுரம் விழா நடைபெறும் இதே நாளில் கனிமொழி விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய ஓட்டை: வாகன ஓட்டிகள் அச்சம்!
வியாழன் 2, ஜூலை 2026 3:24:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு!
வியாழன் 2, ஜூலை 2026 12:34:29 PM (IST)

தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!
வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)

தூத்துக்குடியில் தொடரும் கஞ்சா வேட்டை: மேலும் 3 பேர் அதிரடி கைது - 6 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 2, ஜூலை 2026 11:28:27 AM (IST)

தவெக ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 10:48:41 AM (IST)


