» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்!
புதன் 15, ஜூலை 2026 12:20:08 PM (IST)
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்குத் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ. 3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக கடந்த 3-ஆம் தேதியே அவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்ததால் அப்போது ஆஜராகவில்லை.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேடப்படும் நபர் (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு நேரில் ஆஜரானார். அவரிடம் நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்குக் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ச.ஜோசப் விஜய் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 11:54:09 AM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)

தூத்துக்குடியில் அரசு மருத்துவர் தற்கொலை : வீடியோ காலில் மனைவியுடன் பேசிவிட்டு விபரீத முடிவு!
புதன் 15, ஜூலை 2026 10:42:51 AM (IST)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!
புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:55:43 PM (IST)

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)


