» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66). இவர் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது கழுத்திலிருந்த 6 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நகை திருட்டுப் போனது குறித்து மரியஅஞ்சலி உடனடியாகத் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டு கும்பலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், வேர்க்கிளம்பிப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இரு பெண்களைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (44), லட்சுமி (40) என்பதும், மரியஅஞ்சலியின் தங்கச் சங்கிலியைத் திருடியதும்தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை விற்கப்பட்டதில் கிடைத்த ரூ.21,000 ரொக்கப் பணத்தைத் திருவட்டார் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: மின்கட்டணக் குளறுபடிகளுக்கு பாஜக கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:16:12 PM (IST)

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 120 பேர் கைது: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 3:46:14 PM (IST)

தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)


