» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 5:44:54 PM (IST)

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக மதிய உணவுத் திட்டம் மட்டுமே நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘காலை உணவுத் திட்டம்’ முதன்முதலில் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடக்கத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்:
தற்போது பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, இத்திட்டத்தை மேல்நிலையாக உயர்த்தி 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
மேலும், ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘மகளிர் விடியல் பயணம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது காலை உணவுத் திட்டத்திற்கும் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
புதன் 22, ஜூலை 2026 5:04:58 PM (IST)

அங்கன்வாடி முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
புதன் 22, ஜூலை 2026 4:42:01 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம்: நாடாளுமன்றப் போராட்டத்திற்கு ஆதரவு
புதன் 22, ஜூலை 2026 3:58:41 PM (IST)

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

நாடெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: நீட் தேர்வு ஒழிப்பே தீர்வு - மு.க.ஸ்டாலின் அறிக்கை!
புதன் 22, ஜூலை 2026 11:05:20 AM (IST)


