» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)
கபினி உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
கேரளம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கபினியின் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று பிற்பகலில் தமிழக கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதிக்கு கபிணியின் உபரி நீர் வந்து சேர்ந்தது. இரவு 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. உபரி நீர் வரத்து காரணமாக செவ்வாய் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 67 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இரவு 8 மணிக்கு வினாடிக்கு 4923 கனஅடியாக அதிகரித்தது. புதன்கிழமை காலை வினாடிக்கு 11,988 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து செவ்வாய் காலை 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 74.01அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 36.24 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடர வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:44:57 AM (IST)

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)

நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:05:53 AM (IST)

சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:50:02 AM (IST)

வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:35:18 AM (IST)

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:45:19 PM (IST)


