» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:00:16 AM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ. 

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் நேற்று மாலையில் ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுமக்கள் அனைவருக்கும் பனிமய மாதா ஆலய திருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது: மீன்பிடி குறைவான காலத்திற்கான நிவாரணத் தொகை ₹6,000-லிருந்து ₹7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.93 லட்சம் மீனவக் குடும்பங்கள் பயனடைவர். இதற்காக ₹135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களுக்கு மானியக் கடன் வழங்குவதற்காக ₹12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதி நிலைமையைப் பொறுத்து மீனவர்களுக்கான கூடுதல் நிவாரணத் தொகைகள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். மேலும், சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது மீனவர்களுக்கான பல்வேறு புதிய நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொழிலதிபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்து நாங்களும் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். விரைவில் இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory