» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதலைக் கைவிட்டதால், இளம்பெண், தாய் கொடூரக் கொலை: காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:15:28 PM (IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலைக் கைவிட்டதால், இளம்பெண்ணையும் அவரது தாயாரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த எம்.பி.ஏ. மாணவர் காவல் துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்சயன் (23) என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் பல்லடம் அருகே பச்சாபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி - தனலட்சுமி தம்பதியின் மகள் பூவரசி (25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பூவரசியின் வீட்டிற்குத் தெரியாமல் அக்சயன் அவருக்குச் சிறிய தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்துள்ளார். இதைக் கண்ட பூவரசியின் பெற்றோர் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பெற்றோர் எதிர்த்ததால் பூவரசி கடந்த சில மாதங்களாக அக்சயனுடன் பேசுவதைத் தவிர்த்து, காதலைக் கைவிட முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்சயன், பூவரசியின் வீட்டின் முகவரியைக் கண்டுபிடித்துப் பெண் கேட்டுச் சென்றுள்ளார். அங்கு பூவரசியின் தாயார் தனலட்சுமி (45) அக்சயனைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அக்சயன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துப் பூவரசியையும், அவரைக் காப்பாற்ற வந்த தாயார் தனலட்சுமியையும் கண்இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்தார். இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்தக் கறையுடன் நின்ற அக்சயனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் பல்லடம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அக்சயன் அளித்த வாக்குமூலத்தில், "பூவரசி இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனக்குக் கிடைக்காத பூவரசி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஆத்திரத்திலும், என்னை அவமானப்படுத்திப் பேசியதாலும் இருவரையும் கொலை செய்தேன்" எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அக்சயனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடகுக் கடையில் நகை திருடிய 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 8:03:08 PM (IST)

தமிழ் மொழி குறித்து சர்ச்சை: நிதி அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க சீமான் வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:06:05 PM (IST)

தொகுதி மறுவரையறை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தீர்மானம் நிறைவேற்றம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:51:11 PM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:44:45 AM (IST)

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:19:23 AM (IST)


