» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 18 வாகனங்களைப் போக்குவரத்து காவல்துறையினர் கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, போக்குவரத்து காவல்துறை சார்பாக நகரின் முக்கியப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறைப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி சரியாக நம்பர் பிளேட் பொருத்தாமல் இயக்கப்பட்ட 18 வாகனங்களைப் போக்குவரத்துப் போலீஸார் கண்டறிந்தனர்.
விதிமுறைகளை மீறித் தெளிவற்ற மற்றும் முறையற்ற எண் பலகைகளுடன் இயங்கிய 18 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதிய மற்றும் சரியான விதிமுறைப்படியிலான நம்பர் பிளேட்டுகளைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டது.
வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் எண் பலகைகளைச் சரி செய்த பின்னரே, காவல்துறையினர் அந்த வாகனங்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி தெளிவான எண் பலகைகளைப் பொருத்த வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:27:51 AM (IST)

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:33:26 AM (IST)

கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்: உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:40:55 PM (IST)

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:16:08 PM (IST)

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:43:13 PM (IST)


