» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு

புதன் 19, ஆகஸ்ட் 2026 12:22:31 PM (IST)

Xavierchurchcoll.jpg

கோட்டார் புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஆலய சீரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பல்வேறு கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நலத்திட்டங்கள் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக ஜெருசலேம் மற்றும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சிறுபான்மையினப் பயனாளிகளுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக அரசு சார்பில் நிதியுதவி மற்றும் மானியங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்களைச் சீரமைப்பதற்கான சிறப்பு நிதியுதவிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பு முதல் தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி வரையிலான கல்வி உதவித்தொகைகள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாகச் சிறுதொழில், சுயதொழில் தொடங்குவதற்குக் குறைந்த வட்டியில் கடனுதவிகள், சுயஉதவிக் குழுக்களுக்குச் சிறப்புச் சிறு கடன்கள், இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்ஒருபகுதியாக சிறுபான்மை மக்களின் கோரிக்கையினை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் புனித சவேரியார் தேவாலயம் புனரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிக்காக ரூ.2.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேவாலயத்தில் தியான மண்டபம், சிலுவை பாதை ஸ்தலங்கள் அமைத்தல், கொடிமரம், தேர், குருசடி சீரமைத்தல், மேற்கூரை பழுதுபார்த்தல், ஆலயம் வர்ணம் பூசுதல், ஆலய பீடப்பணிகள், மின்சார பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள சிறு சிறு பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊட்டுவாழ்மடம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ஊட்டுவாழ்மடம்-கம்பளம் நியாயவிலைக்கடை நேரில் பார்வையிட்டு தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தங்கு தடையின்றி ரேசன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது. அனைத்து குடும்ப அட்டைத்தாரருக்கும் அனைத்து குடிமைப்பொருட்களும் கிடைப்பதை கடை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார்.

ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் இரா.ஐஸ்வர்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், கோட்டார் சவேரியார் தேவலாய பங்குதந்தை அருட்பணி அபிஷன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், பங்குபேரவை செயலாளர் ராஜன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் மருதுபாண்டியன், உதவியாளர் தனேஷ்வர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory