» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:11:16 PM (IST)
சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சோக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் விஜயமாலினி (45). கடந்த 20.10.2021 அன்று தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரியனேந்தல் பாலம் அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிரியை விஜயமாலினியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரது கணவர் தாமோதரன், மகள் ரிஷிப்ரியா மற்றும் மகன் மோனிக் பிரசன்னா ஆகியோர் உரிய இழப்பீடு கோரி வழக்கறிஞர் செல்வராஜ் மூலமாக மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கை நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி செல்வம் தீவிரமாக விசாரித்தார். வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயிரிழந்த ஆசிரியை விஜயமாலினியின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 27 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:47:57 PM (IST)


