» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)
தக்கலை அருகே கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளைத் திருவிதாங்கோடு பகுதி பொதுமக்கள் நள்ளிரவில் மடக்கிப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, நேற்று தக்கலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், பிரதான சாலையைத் தவிர்த்து கனிமவளக் கடத்தல் கும்பல் மாற்றுப்பாதையில் லாரிகளை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
தோட்டியோடு, ஆழ்வார்கோயில் வழியாகத் திருவிதாங்கோடு பகுதிக்குள் லாரிகள் நுழைந்துள்ளன. கனிமவளங்களை ஏற்றி வந்த லாரிகளைப் பார்த்த திருவிதாங்கோடு பகுதி பொதுமக்கள், இரவு 8 மணி அளவில் 3 லாரிகளையும், இரவு 10 மணிக்கு மேல் மேலும் 2 லாரிகளையும் அதிரடியாக வழிமறித்துச் சிறைபிடித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 5 கனரக லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் லாரிகளைச் சிறைபிடித்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பிரதான சாலைகளில் மட்டும் சோதனைகளைச் சுருக்காமல், கனிமவளக் கடத்தலைத் தடுக்க கிராமப்புற மாற்றுப்பாதைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:47:57 PM (IST)


