» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணித் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (21-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. தலைமைபதி தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
குரு பால. லோகாதிபதி, குரு.பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 31-ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது
நாளை சனிக்கிழமை 22-ம் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் பவனி வருதல், மூன்றாம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை 23-ம் தேதி இரவு அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 24-ம் தேதி அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 25-ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 26-ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல், 27-ம் தேதி அய்யா கருட வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
8-ம் திருநாளான 28-ம்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது, தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும், தொடர்ந்து அன்னதர்மமும் நடக்கிறது.
29-ம் தேதி அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், 30-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பவனிவரும் நிகழ்சியும் நடக்கிறது.
ஆகஸ்ட் 31ல் தேரோட்டம்:
11-ஆம் திருநாளான ஆகஸ்ட் 31 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் புறப்பட்டு பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருள, தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. அன்று இரவு 12 மணிக்குக் காளை வாகனத்தில் அய்யா பவனி வந்த பிறகு கொடியிறக்கப்பட்டு, பக்தர்களுக்கு இனிமம் வழங்கித் திருவிழா நிறைவடையும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளைத் தலைமைப்பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:47:57 PM (IST)


