» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அம்மிக்கல்லால் தாக்கி கல்லூரிப் பேராசிரியை கொடூர கொலை - மகன் வெறிச்செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:36:45 AM (IST)
திருச்செந்தூர் அருகே ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியையான தாயை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்று, அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் படம் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா (62), ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். இளைய மகன் தங்க பாலன் (27). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை அன்புமணி பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தாயுடன் தனியாக இருந்த தங்க பாலன், திடீரென வீட்லிருந்த அம்மிக்கல்லை எடுத்துத் தாய் ரேணுகாவின் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். மேலும் இச்சம்பவத்தைச் தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் புகைப்படமாக எடுத்து அனுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர், உயிரிழந்த ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட தங்க பாலன் தற்போது அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:49:04 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:47:57 PM (IST)


