» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!
திங்கள் 4, டிசம்பர் 2023 11:14:11 AM (IST)

கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஹெட் 28, பிலிப் 4, ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17, மேத்யூ ஷார்ட் 16, பென் துவர்ஷுயிஸ் 0 ரன்னில் வெளியேறினர்.ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார். கடைசி வரை போராடிய மேத்யூ வேட் 22 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
