» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய வில்வித்தை அணிகள் கால்இறுதிக்கு தகுதி
வெள்ளி 26, ஜூலை 2024 11:25:42 AM (IST)

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கினாலும், ஒரு சில போட்டிகள் முன்னதாகவே ஆரம்பித்து நடந்து வருகிறது. இதில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் 64 வீராங்கனைகள் கலந்து கொண்டு 12 செட்களில் மொத்தம் 72 அம்புகளை இலக்கை நோக்கி எய்தனர். இதன் முடிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அங்கிதா பகத் (666 புள்ளி) 11-வது இடமும், பஜன் கவுர் (659 புள்ளி) 22-வது இடமும், தீபிகா குமாரி (658 புள்ளி) 23-வது இடமும் பிடித்தனர்.
தென்கொரிய வீராங்கனைஉலக சாதனை
தென்கொரியா வீராங்கனை லிம் சிஹியோன் 694 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன் புதிய உலக சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தென்கொரியாவின் சயோங் காங் 692 புள்ளிகள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதனை நேற்று தகர்த்தார்.
தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 3 பேரும் எடுத்த புள்ளிகள் ஒட்டுமொத்தத்தின் அடிப்படையில் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா (1,983 புள்ளி) 4-வது இடம் பிடித்து நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல் முறையே முதல் 3 இடங்களை பெற்ற தென்கொரியா (2,046), சீனா (1,996), மெக்சிகோ (1,986) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியது. கால்இறுதியில் இந்திய அணி பிரான்ஸ் அல்லது நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
கால்இறுதியில் இந்தியா
ஆண்கள் தனிநபர் பிரிவின் ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர்கள் தீரஜ் பொம்மதேவரா (681 புள்ளி) 4-வது இடமும், தருண்தீப் ராய் (674) 14-வது இடமும், பிரவீன் ஜாதவ் (658) 39-வது இடமும் பெற்றனர். தென்கொரியாவின் கிம் வோஜின் (686 புள்ளி) முதலிடமும், கிம் ஜி டியோக் (682) 2-வது இடமும் பிடித்தனர்.
இந்திய வீரர்கள் எடுத்த ஒட்டுமொத்த புள்ளியின் அடிப்படையில் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா (2,013 புள்ளி) 3-வது இடத்தை சொந்தமாக்கி கால்இறுதிக்குள் கால்பதித்தது. இதேபோல் தென்கொரியா (2,049) முதலிடமும், பிரான்ஸ் (2,025) 2-வது இடமும், சீனா (1,998) 4-வது இடமும் பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி கால்இறுதியில் துருக்கி அல்லது கொலம்பியாவை சந்திக்கிறது. கால்இறுதியை தாண்டினால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை அதட்டியது. இஸ்ரேல்-மாலி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ரக்பி செவன்ஸ் ஆண்கள் பிரிவில் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வான்கடேவில் சாதனை சேஸிங்: ரோஹித் - ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 12:07:12 PM (IST)

மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
ஞாயிறு 3, மே 2026 1:42:39 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)

இந்திய இன்டோர் ஓபன் தடகளப் போட்டி: தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் பங்கேற்பு
சனி 2, மே 2026 11:52:50 AM (IST)

ஐபிஎல் விதிமுறை மீறல்: ராஜஸ்தான் இளம் வீரரிடம் ஆக்ரோஷம் காட்டிய ஜேமிசனுக்கு அபராதம்!
சனி 2, மே 2026 11:49:03 AM (IST)

இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்கிற்கு அபராதம்: ஆர்.ஆர். அணி நிர்வாகத்திற்கும் பிசிசி ஐஎச்சரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:14:41 PM (IST)


