» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிசிசிஐ ஒத்துழைப்பால்தான் கிரிக்கெட் வீரராக இருக்கிறேன் - நடராஜன்

வெள்ளி 26, ஜூலை 2024 3:59:45 PM (IST)

பிசிசிஐ ஒத்துழைப்பால்தான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகியிருக்கிறேன் என்று நடராஜன் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிசிசிஐ எனக்கு போதுமான வாய்ப்புகளை அளிக்கிறது. காயம் காரணமாக சில போட்டிகளில் நான் பங்கேற்க முடியவில்லை. பிசிசிஐ வீரர்களிடம் எந்தவொரு ஏற்றத் தாழ்வுகளையும் பார்ப்பதில்லை; கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory