» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்தியா சாதிக்கும்: ராகுல் டிராவிட் நம்பிக்கை
செவ்வாய் 30, ஜூலை 2024 3:44:04 PM (IST)
ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்றால் சிறப்பாக இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள 34 வது ஒலிம்பிக்கில் (2028), முதன் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், பாரிசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் இந்திய அணி முன்னாள் வீரர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.அவர் கூறியது: வீரர்கள் ஓய்வு அறையில் ('டிரசிங் ரூம்') 2026ல் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை, 2027ல் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை குறித்து பேசுகின்றனர். இத்துடன் 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் பங்கேற்று, ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவது, உலகின் பல முன்னணி நட்சத்திரங்களை சந்திப்பதுடன், இதில் பங்கேற்று கிரிக்கெட் பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்புகின்றனர்.
என்னைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றால், அது சிறப்பான தொடராக அமையும். இது எனது கனவாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இதில் என்னால் பங்கேற்க முடியாது என்றாலும், முடிந்தவரை தொடரை சிறப்பாக நடத்த தேவையான முயற்சி எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல்?
வெள்ளி 30, ஜனவரி 2026 11:48:33 AM (IST)

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: சன்ரைசர்ஸ் 3வது முறையாக சாம்பியன்!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:25:18 PM (IST)

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி: நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
திங்கள் 26, ஜனவரி 2026 11:43:56 AM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் வெற்றி: இந்திய அணி சாதனை!
சனி 24, ஜனவரி 2026 11:58:43 AM (IST)

டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்: வங்கதேசம் விலகல்
வியாழன் 22, ஜனவரி 2026 9:29:07 PM (IST)


உண்மைJul 30, 2024 - 04:38:56 PM | Posted IP 172.7*****