» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக திராவிட் மீண்டும் நியமனம்

சனி 7, செப்டம்பர் 2024 4:29:41 PM (IST)

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக திராவிட் நியமனம் செய்யப்பட்டபோது அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory