» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 27ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை!

திங்கள் 30, செப்டம்பர் 2024 5:16:30 PM (IST)



சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் இன்று (செப். 30) 47 ரன்களை எடுத்தபோது, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தச் சாதனைப் பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 623 இன்னிங்சில் 27 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கைத் தொட்டார். 

தற்போது விராட் கோலி வெறும் 594 இன்னிங்சில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 27 ஆயிரம் ரன்களைக் கடந்ததில் சச்சின் சாதனையையே கோலி முந்தியுள்ளார். இதன்மூலம் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கு சொந்தமாகியுள்ளது. இதற்கு முன்பு, இலங்கை வீரர் குமார் சங்கக்கார 666 இன்னிங்சில் 28,016 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்சில்27,483 ரன்கள் சேர்த்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory