» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:04:43 PM (IST)

கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று (அக். 1) காலை தொடங்கியது. கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை திரட்டியது.
இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அதனைத்தொடர்ந்து, ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, 95 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)
