» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்பராஸ் கான் இரட்டை சதம்: 27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை வென்றது மும்பை!
சனி 5, அக்டோபர் 2024 4:21:10 PM (IST)

சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து அசத்த, 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மும்பை-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டி கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்னுடனும், துருவ் ஜூரெல் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 121 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன் எடுத்துள்ளது. மும்பை இதுவரை 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சர்பராஸ் கான் 9 ரன்னுடனும், தனுஷ் கோடியன் 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர் . இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது .
தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 5வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோலி, படிக்கல் அதிரடியில் பெங்களூரு வெற்றி: சாய் சுதர்சனின் சதம் வீணானது!
சனி 25, ஏப்ரல் 2026 10:54:02 AM (IST)

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம் - மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:56:10 AM (IST)

டெல்லிக்கு எதிராக 135 ரன்கள் குவிப்பு: கோலியின் சாதனையைச் சமன் செய்த அபிஷேக் சர்மா!
புதன் 22, ஏப்ரல் 2026 5:04:22 PM (IST)

சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு: அதிரடி வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:11:09 PM (IST)

திலக் வர்மா சதம், அஸ்வனி அசத்தல் பந்துவீச்சு : வெற்றிப் பாதைக்கு திரும்பியது மும்பை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:17:26 PM (IST)

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் புதிய சாதனை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:02:45 PM (IST)

