» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அபிஷேக் சர்மா அதிவேக சதம் விளாசி சாதனை : இந்தியா அபார வெற்றி!
திங்கள் 3, பிப்ரவரி 2025 11:20:57 AM (IST)

இங்கிலாந்துடனான 5வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 2-வது அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் 3ல் வென்றுள்ள இந்தியா, 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு 16 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அபிஷேக் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் மழை பொழிந்தார். 17 பந்துகளில் 50 ரன்னை எட்டிய அவர், 37 பந்துகளில் சதம் விளாசினார். எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் நிலைத்து நின்று ஆடிய அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 135 ரன் குவித்து அவுட்டானார்.
அதில், 13 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம். 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக். இழப்புக்கு 247 ரன் குவித்தது. இதையடுத்து 248 ரன் மெகா இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 150 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்தியாவின் முகம்மது ஷமி 3, வருண் சக்ரவர்த்தி, சிவம் துாபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இது 2-வது அதிவேக சதமாகும். அவர் 135 ரன்களில் அவுட்டானார். இந்த வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.
ஆர்ச்சர் மோசமான சாதனை
இந்த தொடர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் பந்துவீச்சில் மொத்தம் 14 சிக்சர்களை வாரி வழங்கினார்.இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் வழங்கிய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆர்ச்சர் படைத்துள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவின் நிகிடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு தொடரில் 16 சிக்சர்கள் வழங்கி முதலிடத்தில் உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:54:13 AM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 6, அக்டோபர் 2025 8:29:53 AM (IST)

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
சனி 4, அக்டோபர் 2025 4:22:32 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!!
சனி 4, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)
