» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி தரவரிசையில் ஷுப்மன் கில் முதலிடம்!
புதன் 19, பிப்ரவரி 2025 5:08:19 PM (IST)

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.
25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதுபெற்றதால் ஷுப்மன் கில் ஐசிசி தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார்.
சமபியன்ஸ் டிராபி போட்டிகள் இன்று முதல் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கின. இந்தியாவுக்கான போட்டிகள் துபையில் நடைபெறுகின்றன. இந்தியாவின் முதல் போட்டி நாளை (பிப்.20) தொடங்குகின்றன. ஐசிசி தரவரிசையில் டாப் 10இல் 4 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளார்கள். இதனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கிறது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை
1. ஷுப்மன் கில் - 796 புள்ளிகள் (இந்தியா)
2. பாபர் அசாம் - 773 புள்ளிகள்
3. ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் (இந்தியா)
4. ஹென்ரிச் கிளாசன் - 756 புள்ளிகள்
5. டேரில் மிட்செல் - 740 புள்ளிகள்
6. விராட் கோலி - 721 புள்ளிகள் (இந்தியா)
7. ஹாரி டெக்டர் - 716 புள்ளிகள்
8. சரிதா அசலங்கா - 696 புள்ளிகள்
9. ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் (இந்தியா)
10. ஷாய் ஹோப் - 672 புள்ளிகள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குஜராத் அணியை போராடி வென்றது பஞ்சாப் : ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை!
புதன் 26, மார்ச் 2025 12:20:23 PM (IST)

அசுதோஷ் சர்மா அபாரம் : லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:36:00 AM (IST)

ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் முதல் சதம் : ஹைதராபாத் அணி புதிய சாதனை!
திங்கள் 24, மார்ச் 2025 12:32:41 PM (IST)

ருதுராஜ், ரச்சின் அபாரம் : மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது சென்னை!
திங்கள் 24, மார்ச் 2025 10:41:49 AM (IST)

ஐபிஎல் 2025 முதல் டி20 போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஞாயிறு 23, மார்ச் 2025 10:07:48 AM (IST)

சர்வதேச டி20 போட்டியில் அதிவேக விரட்டல்: பாகிஸ்தான் அணி உலக சாதனை!
சனி 22, மார்ச் 2025 12:30:19 PM (IST)
