» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா தகுதி பெறாததால் ரூ. 45 கோடி இழப்பு!

வியாழன் 13, மார்ச் 2025 11:49:49 AM (IST)



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தகுதி பெறாததால், டிக்கெட் விற்பனையில் ரூ.45 கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யு.டி.சி.,) நடத்தப்படுகிறது. இதன் 3வது சீசனுக்கான பைனல், வரும் ஜூன் 11-15ல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியை 1-3 என கோட்டைவிட்டது. இதனால் இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு தகுதி பெறத்தவறியது.

லார்ட்ஸ் மைதானத்தை நிர்வகிக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,), இந்தியா விளையாடினால் பைனலுக்கான டிக்கெட் விலையை அதிகப்படுத்த முடிவு செய்திருந்தது. ஆனால் தகுதி பெறாததால், கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முன்வரமாட்டர். வேறு வழியில்லாததால், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வழக்கமான விலைக்கே விற்பனை செய்ய உள்ளது. இதனால் டிக்கெட் விற்பனையில் ரூ. 45 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory