» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராம நவமி: ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம்

சனி 29, மார்ச் 2025 10:40:38 AM (IST)

கொல்கத்தா  போலீசாரின் வேண்டுகோளை ஏற்று  ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி வேறு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்தியாவில் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற இருந்தது. 

அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்தது. இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் , இந்த ஆட்டத்துக்கான தேதி மட்டும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி கொல்கத்தா- லக்னோ இடையிலான மோதல் ஏப்ரல் 8-ந்தேதி மாலை 3.30 மணிக்கு அதே கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory