» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியால் தொடர்ந்து 10 ஓவர்​கள் நின்று பேட்​டிங் செய்​வது முடி​யாது: பிளெமிங் விளக்கம்

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:01:44 PM (IST)



எம்.எஸ்.தோனியால் தொடர்ந்து 10 ஓவர்​கள் நின்று பேட்​டிங் செய்​வது முடியாது என்று சிஎஸ்கே அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்​துள்​ளார்.

குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் சிஎஸ்கே அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. சிஎஸ்கே அணி​யின் மிகச்​சிறந்த ஃபினிஷர் என்று பெயரெடுத்த எம்​.எஸ். தோனி, இந்த ஆட்​டத்​தில் 11 பந்​துகளில் 16 ரன்​கள் மட்​டுமே எடுத்து வீழ்ந்​தார்.

ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு எதி​ரான போட்​டி​யின்​போது தோனி 9-ம் வரிசை​யில் களம் இறங்​கி​னார். இது அப்​போது அனை​வ​ராலும் விமர்சிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் நடைபெற்ற ராஜஸ்​தான் போட்​டி​யின்​போது தோனி, 7-வது வீர​ராக களம் புகுந்​தார். இருந்​த​போ​தி​லும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்​றிக்கு அழைத்துச் செல்ல முடிய​வில்​லை. கடைசி ஓவரின் முதல் பந்​திலேயே ஆட்​ட​மிழந்​தார் தோனி. 

இதுகுறித்து சிஎஸ்கே அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: தோனி​யின் பேட்​டிங் வரிசை போட்​டி​யின் சூழ்​நிலை மற்​றும் நேரம் சார்ந்​த​தாக உள்​ளது. இது குறித்த முடிவை தோனி​தான் எடுக்​கிறார். ஆடு​களத்​துக்குள் எப்​போது வரு​வது என்​பதை அவரே முடிவு செய்​கிறார்.

அவரது உடல் மற்​றும் முழங்​கால் இதற்கு முன்பு இருந்​தது போல் இல்​லை. அவர் நன்​றாக நடந்​தா​லும் அதில் சில பிரச்​சினை​கள் உள்​ளன. அவரால் தொடர்ந்து 10 ஓவர்​கள் நின்று பேட்​டிங் செய்​வது முடி​யாது. அவர் அணிக்​காக என்ன செய்ய முடி​யும் என்​பதை சிந்​தித்து செயல்​பட்டு வரு​கிறார் என்​று​தான் நான் கூறு​வேன். இன்​றைய போட்டி போல, ஆட்​டம் சமநிலை​யில் இருந்​தால் அவர் சற்று முன்​ன​தாகவே பேட்​டிங் செய்ய ஆடு​களத்​துக்​குள் வரு​வார். 

இதனால், மற்ற வீரர்​கள் தங்​களின் வாய்ப்​பு​களை பயன்​படுத்​து​வதற்கு வாய்ப்புகிடைக்​கும். இது தொடர்​பாக நான் கடந்த ஆண்டே தெரி​வித்​திருந்​தேன். எம்​.எஸ். தோனி எங்​களுக்கு மிக​வும் மதிப்புமிக்க வீரர். தலைமை பண்பு மற்​றும் விக்​கெட் கீப்​பிங்​கில் அவர் சிறந்து விளங்​கு​கிறார்​. இவ்​வாறு ஸ்டீபன்​ பிளெமிங்​ தெரிவித்​தார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory