» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாய் சுதர்சன், பட்லர் அசத்தல் : ஆர்சிபியை வீழத்திய குஜராத்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:42:37 AM (IST)

சாய் சுதர்சன், பட்லர் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மற்றும் சிராஜ் அசத்தல் பந்துவீச்சு காரணமாக பெங்களூரு அணியை வீழ்த்தியது குஜராத் அணி.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் 2 போட்டிகளில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணி சொந்த மைதானத்தில் ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்கள் குவித்தார். சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்சர்களுக்கும் பவுண்டரிகளுக்குமாக பறக்க விட்ட கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 39 பந்துகளில்73 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முதல் தோல்வி இதுவாகும். இதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி 3வது இடத்திற்கு சறுக்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோனியால் தொடர்ந்து 10 ஓவர்கள் நின்று பேட்டிங் செய்வது முடியாது: பிளெமிங் விளக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:01:44 PM (IST)

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர் அஸ்வனி குமார்: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:28:08 AM (IST)

பிரசித் கிருஷ்ணா, ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் அசத்தல் : மும்பை அணியை வீழ்த்தியது குஜராத்!
ஞாயிறு 30, மார்ச் 2025 11:42:44 AM (IST)

ராம நவமி: ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம்
சனி 29, மார்ச் 2025 10:40:38 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி: 17 வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வெற்றி!
சனி 29, மார்ச் 2025 10:32:03 AM (IST)

குஜராத் அணியை போராடி வென்றது பஞ்சாப் : ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை!
புதன் 26, மார்ச் 2025 12:20:23 PM (IST)
