» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!

திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை கேசவ் மகராஜ் படைத்தார்.

ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், கோடி யூசுப், கேசவ் மகராஜ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இந்நிலையில், கிரேக் எர்வினின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கேசவ் மகராஜ் 59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டும், ஒருமுறை 10 விக்கெட்டும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory