» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடரில் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி வீரர் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. 12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது. இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)
