» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பிக்பாஷ் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு ஆஸி.கிரிக்கெட் சிஇஓ அழைப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 11:12:40 AM (IST)
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ டாட் கிரீன்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) டாட் கிரீன்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "அஷ்வின் போன்ற ஒரு வீரர் இங்கு வந்து பிக்பாஷ் தொடரில் விளையாடுவது பல மட்டங்களில் சிறந்ததாக இருக்கும். அவர் பிக் பாஷ் தொடருக்கு நிறைய கொண்டு வரக்கூடிய ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர்” என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். இருப்பினும் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்காக துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 போன்ற தொடர்களில் தம்முடைய பெயரை விண்ணப்பித்துள்ளதாகவும் அஸ்வின் கூறியிருந்தார். இதன் காரணமாக அஸ்வின் பிக்பாஸ் தொடரில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
புதன் 17, செப்டம்பர் 2025 10:58:42 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)
