» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!

சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)



ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்றுவந்த நான்காவது ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாக்ஸிங்டே டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 110க்கு ஆட்டமிழந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 132க்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணி 178/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2011க்குப் பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து அணி 3-1 தொடரை இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory