» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை டூ சென்னை: சிஎஸ்கே-வில் இணையும் மும்பை இளம் வீரர்!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:53:23 AM (IST)

ஐபிஎல் தொடரில் காயங்களால் தடுமாறி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பேட்டிங் வரிசையை வலுப்படுத்த மும்பையைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஆயுஷ் வர்தக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மும்பை சீனியர் அணிக்காக இதுவரை விளையாடவில்லை என்றாலும், மும்பை யு-23 (U-23) அணியின் கேப்டனாக ஆயுஷ் வர்தக் முத்திரை பதித்துள்ளார். 2024-25 சிகே நாயுடு கோப்பைத் தொடரில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை விளாசி அசத்தினார். கடந்த ஆண்டு 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 363 ரன்களைக் குவித்தார்.

இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, 'மீடியம் ஃபாஸ்ட்' பந்துவீச்சாளராகவும் செயல்படக்கூடியவர். சமீபத்தில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) சிறந்த யு-23 வீரருக்கான விருதையும் வென்றார்.

சிஎஸ்கே-வின் இக்கட்டான நிலை

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்த 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அணி இருக்கிறது.

தொடர்ச்சியாக முக்கிய வீரர்கள் காயமடைவது அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது:

தோனி, கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் காயம் காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காயம் காரணமாக விலகிய ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக ஆகாஷ் மத்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பேட்டிங் வரிசையைச் சீர்செய்ய ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுவதால், ஆயுஷ் வர்தக் மிட்-சீசன் டிரையல்ஸ்க்கு (Mid-season trials) அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு சென்னை வந்தடைந்த ஆயுஷ் வர்தக், இன்று நடைபெறும் டிரையல்ஸில் பங்கேற்கிறார். இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களைப் பட்டை தீட்டுவதில் வல்லவரான தோனி, ஆயுஷ் வர்தக்கை அணியில் இணைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. டிரையல்ஸில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், விரைவில் சிஎஸ்கே அணியில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory