» சினிமா » திரை விமர்சனம்

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் திரைவிமர்சனம்!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:21:31 PM (IST)



நாயகன் ரஜினிகாந்த் சென்னையில் மேன்சன் நடத்தி வருகிறார். விசாகப்பட்டினத்தில் உள்ள இவரது நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் அறிந்து அங்கு செல்கிறார். சென்ற இடத்தில் சத்யராஜ் இயற்கையாக சாகவில்லை என்றும் யாரோ ஒருவர் சத்யராஜை அடித்து கொலை செய்து இருப்பதாகவும் ரஜினி தெரிந்துக் கொள்கிறார். தன் நண்பனை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார் ரஜினி.

இறுதியில் சத்யராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? அவர்களை ரஜினி பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரஜினிகாந்த், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நண்பனுக்காக பழிவாங்க துடிப்பது, கொன்றதுக்கான காரணத்தை தேடி அலைவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நாகார்ஜுனா. இவரது உடை, நடை அனைத்தும் ரசிக்க வைக்கிறது. சௌபினின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அடியாளாகவும், நல்லவன் போல் நடித்து வில்லனாகவும் அசத்தி இருக்கிறார். சத்யராஜ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது மகளாக வரும் ஸ்ருதி ஹாசன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். சார்லி, காளி வெங்கட், கண்ணா ரவி, லொள்ளு சபா மாறன், ரெபா மோனிகா, மோனிஷா பிளசி என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

நண்பனுக்காக பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. பல காட்சிகளில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் வைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். பல கதாபாத்திரங்களின் எண்ட்ரியும் அவர்களின் நடிப்பும் வியக்க வைக்கிறது. கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு இருக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் படத்தில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார். அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து இருக்கிறது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பல காட்சிகளில் பளிச்சிடுகிறது. 

பிளாஸ்பேக் காட்சிகளில் 35 வருடங்களுக்கு முந்தைய ரஜினிகாந்தை (ஏ.ஐ. தொழில்நுட்பத்தில்) பார்க்க முடிகிறது.  படத்தின் நீளம் அதிகம். வன்முறை காட்சிகள் இந்தளவு தேவையா?வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும், புதுமையான திரைக்கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளின் கோர்வையாய் படத்தை இயக்கி, மீண்டும் தனது முத்திரையைப் பதித்துள்ளார், லோகேஷ் கனகராஜ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory