» சினிமா » செய்திகள்
முத்தையா முரளிதரன் பயோபிக்: 800 திரைப்படத்தின் டிரெய்லர் சச்சின் வெளியிட்டார்.
செவ்வாய் 5, செப்டம்பர் 2023 4:21:27 PM (IST)

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘800’. கரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் படப்பணிகள் தள்ளிபோனது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சர்ச்சையால் அவர் படத்திலிருந்து விலகினார்.
இதனையடுத்து, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் இப்போது முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை கிரிக்கெட்டர் சச்சின் வெளியிட்டுள்ளார். தமிழில் உருவாகியுள்ள படம் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு டப் செய்யபட்டு வெளியாகியுள்ளது.
இலங்கைப் போரை பின்னணியாக கொண்டு முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. ‘குடியுரிமையே இல்லாத கொத்தடிமை கூட்டத்துல இருந்து வந்தவங்களுக்கு, குடிமகன்ங்குற அங்கீகாரம் கிடைக்குறதே கஷ்டம்’ என்ற வசனம் இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
