» சினிமா » செய்திகள்
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!
வெள்ளி 8, செப்டம்பர் 2023 11:30:39 AM (IST)
சென்னையில் பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.

தமிழில், கொம்பன். பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அண்மையில், நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர்.
ராஜ்கிரண், வசந்த் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். ராஜ்கிரண் இயக்கி, நடித்த அரண்மனை கிளி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். எதிர்நீச்சல் என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம், மக்களிடையே மிகவும் பிரபலமடைந்திருந்தார் மாரிமுத்து. இவர் பேசும் வசனங்கள் மீம்களாக மாறி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இந்நிலையில் இரவு டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
