» சினிமா » செய்திகள்
மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 8, செப்டம்பர் 2023 4:10:20 PM (IST)
மாரிமுத்துவின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார். இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
