» சினிமா » செய்திகள்
பெற்றோர்களை சந்தித்த விஜய்: வைரல் புகைப்படம்
வியாழன் 14, செப்டம்பர் 2023 12:03:58 PM (IST)

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், தனது பெற்றோர்களை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு நடிகர் விஜய் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய், இதய பிரச்னைக்காக அறுவை சிகிச்சை கொண்ட தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நேரில் சந்தித்து நலம்விசாரித்தார். விஜய் தனது பெற்றோர்களை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் மக்கள் இயக்க பிரச்னையில் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமீபகாலமாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
