» சினிமா » செய்திகள்
ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!
வெள்ளி 13, அக்டோபர் 2023 10:40:01 AM (IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. படத்தை லைகா தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
