» சினிமா » செய்திகள்
ரஜினி வீட்டில் நவராத்திரி விழா: முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், பங்கேற்பு!
புதன் 25, அக்டோபர் 2023 12:00:24 PM (IST)

நடிகர் ரஜினி வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உட்பட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செய்திருந்தார். அத்துடன் ஏராளமான விவிஐபிகளுக்கும் லதா ரஜின்காந்த் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பை ஏற்றுதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ரஜினி வீட்டில் சங்கமித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் மனைவியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் மனைவியும், அவரது மகள்கள் மற்றும் பேரன்கள் இந்த விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
