» சினிமா » செய்திகள்
நீங்கள் தான் தலைவர்!.. ரஜினியைப் புகழ்ந்த அமிதாப்!
வியாழன் 26, அக்டோபர் 2023 3:13:42 PM (IST)

நீங்கள்தான் தலைவர், எப்போதும் என் அன்புக்குரியவர் என்று நடிகர் ரஜினிக்கு அமிதாப் பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நடிகர் அமிதாப் பச்சன் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரஜினிகாந்த், "த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதைப் பகிர்ந்த அமிதாப் பச்சன், "சார்.. நீங்கள் எப்போதும் என் அன்புக்குரியவர். உங்கள் படத்தின் பெயரைப் பாருங்கள். ‘தலைவர் 170’. தலைவர் என்றால் அது நீங்கள்தான். அதில் எதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே? உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இருவரும் இணைந்து, 'அந்தாகானூன்’ 'ஹேராஃப்தார்’, ‘ஹும்’ ஆகிய படங்களிலேயே நடித்துள்ளனர். அமிதாப் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘டான்’ படத்தை தமிழில் ‘பில்லா’ என ரீமேக் செய்து ரஜினி நடித்திருந்தார். இது ரஜினிக்கு பெரிய வசூலைக் கொடுத்த படங்களுள் ஒன்று!
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
